13th September 2024 18:05:49 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 6 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் ஊராபொல மீவிட்டிதிகம்மான பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்தனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்ய உள்ளூர் நன்கொடையாளர்களினால் நிதி மற்றும் பொருள் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களினால் 2024 செப்டம்பர் 09 அன்று இந்த வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.