Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th June 2024 09:16:00 Hours

6 வது இலங்கை சமிக்ஞை படையணி படையினரால் இரத்த தானம்

6 வது இலங்கை சமிக்ஞை படையணி படையினர் 16 ஜூன் 2014 அன்று தகவல் தொழில்நுட்பப் பிரிவாக மீண்டும் நிறுவப்பட்ட பின்னர், படையணியின் 10வது ஆண்டு நிறைவை ஒட்டி இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். இரத்த தானம் வழங்கும் நிகழ்வு 13 ஜூன் 2024 அன்று பனாகொட இராணுவ வளாகத்தில் உள்ள சமிக்ஞை படையணி தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இந்த நன்கொடை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இரத்த தானம் செய்தனர். நாரஹேன்பிட்டி, தேசிய இரத்த மாற்று சேவையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு பங்களிப்பை வழங்கினர்.