Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2023 22:28:40 Hours

6 வது இலங்கை கவச வாகன படையினர் திருகோணமலை வைத்தியசாலையில் இரத்த வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட்படை பிரிவின் 223 வது காலாட் பிரகேடின் 6 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 04) மொரவெவ முகாம் வளாகத்தில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் இரத்த வங்கி மருத்துவ அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இரத்த தான வழங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.

திருகோணமலையில் தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் நலனுக்காக இரத்த வங்கியில் இரத்தம் குறைவாக உள்ள நிலையில் 6 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் தானாக முன்வந்து தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர்.

6 வது இலங்கை கவச வாகன படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீடப்ளியூஎன்பீடப்ளியூபிஎஸ்யுபீ பிலிமத்தலாவ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இரத்ததான நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.