07th May 2024 18:58:36 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஏஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 6 வது இலங்கை கவச வாகன படையணியின் படையினரால் கித்துலுத்துவ, மொரவெவ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பத்திற்கு திரு. அனுராத கொத்தலாவல அவர்களின் அனுசரணையில் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 09 ஏப்ரல் 2024 அன்று பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
223 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 6 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் முயற்சியால் 6 வது இலங்கை கவச வாகன படையணியின் படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள ஒத்துழைப்பில் நிர்மாணப் பணி நிறைவுசெய்யப்பட்டது.
இந் நிகழ்வின் போது, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி வீட்டு திறப்பை பயனாளிக்கு அடையாளமாக கையளித்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச வாசிகள் பலர் பங்கேற்றனர்.