07th March 2023 19:27:29 Hours
அநுராதபுரம், மிஹிந்தலையில் உள்ள 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமுக்குள் புதிதாக நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் திங்கட்கிழமை (6) திறந்து வைத்தார்.
6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்களை அன்புடன் வரவேற்றதுடன் படையினரின் நீண்டகாலத் தேவையான நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்குமாறு அவரை அழைத்தார்.
தளபதி அவர்களுக்கு முகாமிலுள்ள படையினருடன் உரையாடும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது.இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.