18th April 2024 18:05:55 Hours
மனித நலனில் அக்கறை காட்டும் விதமாக 6 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி படையினர் உடஹாமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் திரு.யூ. அனுராதா கொத்தலாவல அவர்களின் அனுசரணையில் கித்துலுத்துவ, மொரவெவ பிரதேசத்தின் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர். இந்த வீடு 2024 ஏப்ரல் 09 ஆம் திகதி பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
6 வது இலங்கை இராணுவ கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் 6 வது இலங்கை இராணுவ கவச வாகன படையணி படையினர் வழங்கிய தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வீடு கைளிக்கும் நிகழ்வின் போது, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களினால் வீட்டு சாவி பயனாளியிடம் அடையாளமாக வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வின் போது திரு.யூ அனுராதா கொத்தலாவல அவர்கள் பிரதேசத்தின் ஆதரவற்ற 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அலுவலர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.