Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2022 20:09:32 Hours

6 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 681 வது பிரிகேட்டின் 6 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரின் முயற்சியில் புதன்கிழமை (31) தேராவில் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இத் திட்டம் கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையில் படையினரின் சொந்த நிதியினூடாக பருப்பு, சர்க்கரை, மசாலா, தானியங்கள், மாவு மற்றும் அரிசி போன்ற உலர் உணவுகளை உள்ளடக்கிய பொதிகள் வழங்கப்பட்டன.