24th August 2021 08:55:47 Hours
6 கஜபா படையணியின் (GR) படையினர் வாகறை அம்பந்தனவெளி பத்ரகாளி அம்மன் கோவில் வளாகத்திற்குள் அறநெறி கல்வி நிலையம் ஒன்றினை கட்டுவதற்கான மனிதவளம், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை வழங்குகின்றனர். இப்பணியானது மட்டக்களப்பு லயன்ஸ் கிளப்பின் முழுமையான நிதி பங்களிப்பில் முன்னெடுக்கப்படுகின்றது.
233 வது பிரிகேட் தளபதி கேர்ணல் வசந்த ஹேவகே அவர்களால் வெள்ளிக்கிழமை (20) மத ஆராதனைகளுக்கு மத்தியில் இந்த புதிய கற்றல் நிலையம் (அறநெறி பாடசலை) கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 233 வது பிரிகேட் தளபதி மற்றும் சிவில் விவகார அதிகாரி ஆகியோரின் பூரண மேற்பார்வையில் திட்டம் முன்னெடுக்கப்படும்.
233 வது பிரிகேட் தளபதி கட்டுமானத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தேவையான மூலப்பொருட்களுக்கான நிதியுதவியினை மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வழங்கியுள்ளது.
233 பிரிகேட் தளபதி, 6 வது கஜபா படையின் கட்டளை அதிகாரி மேஜர் R.M.J.B ரணராஜ் 233 பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் படையினர் கொவிட் 19 தடுப்பு விதிகளை கடைபிடித்து நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.