Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2021 04:45:22 Hours

6 வது கஜபா படையணியின் படையினரால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 233 வது பிரிகேட்டுக்கு கீழ் இயங்கும் 6 வது கஜபா படையணியின் படையினர், வாகரை மகா வித்தியாலயத்தை சூழவுள்ள பகுதியில் சிரமதானப் பணிகளில் செவ்வாய்க்கிழமை 6 ஆம் திகதி ஈடுபட்டனர்.

குறித்த சிரமதானப் பணிகளானது 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

சிரமதான பணிகளுக்கு பின்னர், வளாகத்தை சுத்தம் செய்ததற்கும், பாடசாலை கட்டிடங்களில் ஓவியம் தீட்டியதற்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் சார்பாக அப்பாடசாலையின் அதிபர் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தார்.