Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2024 13:27:07 Hours

6 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் வெயங்கொடையில் வீழ்ந்த மரத்தை அகற்றல்

141 வது காலாட் பிரிகேட் தளபதி, கேணல் ஆர்ஆர்டிஈஎஸ் தர்ம விக்கிரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 2024 மே 25 அன்று நிலவிய சீரற்றகாலநிலை காரணமாக வெயங்கொடை பொருளாதார மத்திய நிலைய வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்திருந்த மரமொன்று அகற்றப்பட்டது.

படையினரின் இந்த விரைவான நடவடிக்கையின் நிமித்தம் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தடையின்றி பயணம்செய்ய உதவியாக காணப்பட்டது. இந்த செயற்பாடு பிரதேசத்தின் இயல்பு நிலைக்கான அர்ப்பணிப்பாகும்.