Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2021 17:45:44 Hours

6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 682 வது பிரிக்கேடின் 6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கினர்.

இந்த திட்டமானது 6 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.