Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2022 18:45:11 Hours

6 வது இலங்கை சிங்க படையினரால் விசுவமடு மக்களுக்கு உலர் உணவுகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள்

வியாழக்கிழமை (20) கிளிநொச்சி விசுவமடு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வறுமையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் 572 பிரிகேடின் 6 வது இலங்கை சிங்க படையணியின் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க 'நித்மிரா' அப்பரல்ஸ் நிறுவன தலைவர் திரு நிநேத்ர பண்டார அவர்களால் தலா ரூபா 6000.00 பெறுமதியான 20 உலர் உணவுப் பொதிகளும் தலா ரூபா 2750/= பெறுமதியான பாடசாலை உபகரண பொதிகள் 115 உம் அன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிராம உத்தியோகத்தர்கள் பாடசாலை சமூகத்தின் ஆலோசனையில் தெரிவு செய்யப்பட்ட இப் பயனாளிகளுக்கு 6 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகத்தில் இவ் விநியோக திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

57 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 572 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய 6 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் யுபிகே சுபசிங்க அவர்கள் இப்பகுதியில் சேவையாற்றும் படையினருடன் இணைந்து இத் திட்டத்தை ஒருங்கிணைத்தார்.

விநியோக நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் தளபதி, 571,572 மற்றும் 573 பிரிகேட்டுகளின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.