Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

6 ஆவது எஸ்எல்ஏஎஸ் படையணி உதைபந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் வெற்றி

22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச உதைபந்தாட்ட சம்பியன்ஷிப்-2020 போட்டியில் 6 ஆவது இலங்கை கவச வாகன படையணியின் உதைபந்தாட்ட வீரர்கள் கஜபா படையணியின் 2 ஆவது (தொண்) பட்டாலியனை தோற்கடித்து வெற்றியைப் பெற்றனர். இப் பேட்டியானது ஞாயிற்றுக்கிழமை 20 ஆம் திகதி திருகோணமலையில் 22ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு மைதானத்தில் நடைபெற்றது.

இரு அணிகளும் போட்டியின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடின. இருப்பினும், 6 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் உதைபந்தாட்ட வீரர்கள் பெனால்டி ஷூட முறையில் 4 - 3 விகிதம் வெற்றியீட்டினர்.

22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்தப் போட்டியை 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு ஏற்பாடு செய்தது. செப்டம்பர் 12 -20 வரை நடைபெற் இந்நிகழ்வில் 9 அணிகளின் பங்குபற்றின.

22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக வீரசூரிய அவர்கள் நிகழவின் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்

முடிவுகள் பின்வருமாறு;

6 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் ஷம்பியன்சிப் போட்டியில் இரண்டாம் இடம் 2 (தொண்) ஜி.ஆர்., சிறந்த வீரராக சிப்பாய் கே.எம். ரிஸ்கர் 2 (தொண்) ஜி.ஆர். இறுதி போட்டியில் சிறந்த வீரர் - Tpr B.G.G.S தசனாயக - சிறந்த கோல் கீப்பர் – கோப்ரல் W.M.S.K சில்வா - 6 எஸ்.எல்.ஐ.சி, சிறந்த கோல் ஷூட்டர் - லான்ஸ் / கோப்ரல் D.M.S திசானாயக - 2 (தொண்) ஜி.ஆர்.

அதிதிகள்,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். best shoes | Jordan Ανδρικά • Summer SALE έως -50%