21st February 2025 12:23:42 Hours
59வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 6 வது கெமுனு ஹேவா படையணியின் அங்கம்பொர பயிற்சியின் இரண்டாம் கட்டம் வெற்றிகரமாக ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சி 2025 பெப்ரவரி 15 முதல் 28 வரை 90 வீரர்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கேற்கும் படையினரின் போர் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இராணுவ அங்கம்பொர அணியைச் சேர்ந்த 10 திறமையான பயிற்றுனர்களால் பயிற்சியளிக்கப்படுகின்றன.