Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2020 23:45:31 Hours

593 ஆவது பாதுகாப்பு படையினரால் கொக்கிலையில் உணவுப் பொதிகள் வழங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் 50 உலர் உணவுப் பொதிகளானது, கொக்கிலை மீன்பிடிக் கிராமத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி வழங்கப்பட்டன.

பொருளாதார நெருக்கடிகளை எதிரநோக்கும் குறித்த குடும்பங்ளுக்கு உதவும் முகமாக இந்த திட்மானது 593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேணல் வசந்த பலமகும்புர அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டன.

தலைமை மதகுரு வென் திஸ்ஸபுர ஶ்ரீ குணரத்ன தேரர் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய கொக்கிலை விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 19 ஆவது கெமுனு ஹேவா ,5ஆவது(தொண்) இலங்கை சிங்க படையணி ஆகிய படையணிகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் வெற்றிக்காக பயனாளிகளும் தங்களது ஒத்துழைப்பினை படையினருக்கு வழங்கினர். latest jordans | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp