Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd February 2020 15:31:00 Hours

593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழா

593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் வெள்ளிக் கிழமை (14) ஆம் திகதி நாயாறுவில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் பொளத்த, இந்து மற்றும் கத்தோலிக்க சமய வழிபாட்டுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது .

593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு தினமான 15 ஆம் திகதிக்கு முன்னர், போதி பூஜை, அன்னதானம், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வற்றாப்பளை கன்னகி அம்மன் இந்து கோயிலில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. மேலும் கொக்கிளாய் புனித செபஸ்டியன் தேவாலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடு நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு 593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியவர்கள தலைமையகத்திலுள்ள படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி பின்னர் தலைமையக வாளகத்தினுள் மரநடுகைகளை மேற்கொண்டார்.

அத்துடன் தலைமையகத்தின் ஏற்பாட்டில் எல்லோரது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பலும் மற்றும் அன்றைய தின மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | jordan Release Dates