23rd October 2024 15:16:08 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 591 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜே உபேசேகரவின் மேற்பார்வையின் கீழ் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி நடத்தப்பட்டது.
12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 10 வது சிங்க படையணி மற்றும் 591 வது காலாட் பிரிகேடின் 8 அதிகாரிகள் மற்றும் 50 சிப்பாய்களின் பங்களிப்புடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு கடற்கரையில் 1500 மீற்றர் தூரத்தினை படையினர் தூய்மையாக்கினர்.