01st February 2025 12:46:02 Hours
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜனவரி 28 முதல் 30 வரை 59 வது காலாட் படைபிரிவில் ஜெட்விங் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிர்வாக ஊழியர்களால் தயாரிப்பு மற்றும் சேவைகள், உணவு மற்றும் பானங்கள், சமையலறை மற்றும் வீட்டு பராமரிப்பு தொடர்பான பயிற்சி திட்டம் நடத்தப்பட்டது.
591, 592 வது மற்றும் 593 வது காலாட் பிரிகேட்களை சேர்ந்த 10 அதிகாரிகள் மற்றும் 85 சிப்பாய்களின் பங்கேற்புடன் 03 நாட்கள் இப் பயிற்சி அமர்வு நடாத்தப்பட்டது.
இந்தப் பயிற்சி அமர்வு, அன்றாட தொடர்புடைய விடயங்களில் ஈடுபட்டுள்ள வீரர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
59 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் கே.எச்.என்.பீ ஹென்னடிகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஜெட்விங் ஹோட்டல் லிமிடெட் நிர்வாக ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.