22nd January 2025 10:58:07 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 593 வது பிரிகேடினால் 6 வது கெமுனு ஹேவா படையணி அங்கம்பொர பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி 2025 ஜனவரி 20 முதல் 2025 பெப்ரவரி 02 வரை 70 படையினரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த பயிற்சித் திட்டம் இராணுவ அங்கம்பொர குழுவைச் சேர்ந்த 15 திறமையான பயிற்றுனர்களின் கூட்டு முயற்சிகள் மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் நடாத்தப்பட்டதுடன், அவர்கள் வீரர்களின் உடல் மற்றும் மன உறுதி, போர் நுட்பங்கள் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சியை வழங்கினர்.