Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2024 19:18:43 Hours

59 வது இராணுவ தடகள போட்டியில் இரண்டு புதிய தேசிய சாதனைகள்

59 வது இலங்கை இராணுவ தடகளப் போட்டி 2023 மார்ச் 31 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் நிறைவடைந்தது, இப்போட்டியில் விளையாட்டு வீர வீராங்கனைகள் சிறந்த செயல்திறன் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுடன் கலந்துகொண்டனர். இராணுவத் தடகளக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என். ரணசிங்க ஆர்எஸ்பீ யூஏஸ்பீ என்டிசி அவர்கள் இராணுவத் தளபதியை வளாகத்திற்கு மரியாதையுடன் வரவேற்றார்.

இராணுவத் தடகளக் குழுவின் தலைவர் வரவேற்பு உரை வழங்கினார். இப் போட்டி நிகழ்வின் இறுதியில் நாளில் 100 மீ ஆண்கள், 100 மீ பெண்கள், 1500 மீ ஆண்கள், 4x400 ஆண்கள் மற்றும் 4x400 பெண்கள் போட்டிகளில் வீரர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தினர். மேலும் இசைக்குழுவின் இசை, உடல் பயிற்சி பயிற்றுனர்களின் செயல்திறன், அணிநடை என்பன நிகழ்வுக்கு மேலும் கவர்ச்சியை சேர்த்தன.

இப்போட்டியின் போது இராணுவ தடகள வீரர்கள் இரண்டு தேசிய சாதனைகள் மற்றும் 13 புதிய போட்டி சாதனைகளைப் பெற்ற பெருமையைப் பெற்றனர். இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கினார்.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, பிரதம பதவிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிறப்பு சாதனைகள் பின்வருமாறு:

தேசிய சாதனைகள்

4x200 மீ ஆண்கள் போட்டி -1:22.93 வினாடி

இலங்கை பீரங்கி படையணியின் பணி நிலை சார்ஜன்ட் எஸ்.ஏ. தர்ஷன

இலங்கை பீரங்கி படையணியின் பொம்படியர் ஜீடிகேகே நிக்கோ பபசர,

இலங்கை பீரங்கி படையணியின் பொம்படியர் பீஎம்பீஎல் கொடிகார

இலங்கை பீரங்கி படையணியின் லான்ஸ் பொம்படியர் ஏஎஸ்எம் சபான்

ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டி - 5.17 மீ

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் கே. புவிதரன்

புதிய போட்டி சாதனை நிகழ்வுகள்

100மீ ஆண்கள் (10.42 வினாடி)

200மீ ஆண்கள் (20.45 வினாடி)

400மீ ஆண்கள் (45.30 வினாடி)

3000மீ தடைத் தாண்டல் ஆண்கள் (8:56.74 நிமிடம்)

400x4 ஆண்கள் (3:06.86 நிமிடம்)

400மீ பெண்கள் (53.22 வினாடி)

10000மீ பெண்கள் (35:01.91 நிமிடம்)

4x100மீ பெண்கள் (47.27 வினாடி)

4x800மீ பெண்கள் போட்டி (9:20.70 நிமிடம்)

4x1500மீ பெண்கள் போட்டி (19:33.19 நிமிடம்)

சப்த போட்டி பெண்கள் (4426 புள்ளிகள்)

சிறப்பு கிண்ணங்கள்

அனைத்து சாம்பியன்ஷிப் (ஆண்கள்) - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (277 புள்ளிகள்) படையணி சவால் கிண்ணம்

அனைத்து சாம்பியன்ஷிப்பிற்கான படையணிகளுக்கிடையிலான சவால் கிண்ணம் (பெண்கள்) - இலங்கை இராணுவ மகளிர் படையணி (348 புள்ளிகள்)

மிகச் சிறந்த செயல்திறனுக்கான (ஆண்கள்) படையணி சவால் கிண்ணம் - இலங்கை பீரங்கி படையணியின் பணிநிலை சார்ஜன் எஸ்.ஏ.தர்ஷன

மிகச் சிறந்த செயல்திறனுக்கான படையணி சவால் கிண்ணம் (பெண்கள்) - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சார்ஜன் ஆர். நதீஷா

ஆண்கள் பிரிவு

முதலாம் இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி - 277 புள்ளிகள்

2ஆம் இடம் – இலங்கை பீரங்கிப் படையணி - 251 புள்ளிகள்

3ஆம் இடம் – இராணுவ சேவைப் படையணி - 130 புள்ளிகள்

4ஆம் இடம் – இலங்கை இலேசாயுத காலாட் படையணி - 104 புள்ளிகள்

5 ஆம் இடம் –கெமுனு ஹேவா படையணி - 85 புள்ளிகள்

6ஆம் இடம் – விஜயபாகு காலாட் படையணி - 19 புள்ளிகள்

7ஆம் இடம் – கஜபா படையணி - 18 புள்ளிகள்

8ஆம் இடம் – இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி - 17 புள்ளிகள்

9ஆம் இடம் – இலங்கை சிங்க படையணி - 15 புள்ளிகள்

10ஆம் இடம் – இராணுவ சமிக்ஞை படையணி - 10 புள்ளிகள்

11 ஆம் இடம் – இலங்கை இராணுவ பொலிஸ் படையணி - 10 புள்ளிகள்

12 ஆம் இடம் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - 4 புள்ளிகள்

13 ஆம் இடம் - இலங்கை பொறியியல் படையணி - 3 புள்ளிகள்

பெண்கள் பிரிவு

முதலாம் இடம் -இலங்கை இராணுவ மகளிர் படையணி - 348 புள்ளிகள்

2ஆம் இடம் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி (பெண்) - 174 புள்ளிகள்

3ஆம் இடம் - இராணுவ சமிக்ஞை படையணி (பெண்) - 162 புள்ளிகள்

4ஆம் இடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி (பெண்) - 102 புள்ளிகள்

5ஆம் இடம் - இலங்கை பொறியியல் படையணி (பெண்) - 6 புள்ளிகள்