Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 13:50:46 Hours

59ஆவது படைப் பிரிவுத் தலைமையக்தின் 12ஆவது ஆண்டு நிறைவு தின விழா

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட 59ஆவது படைப் பிரிவுத் தலைமையக்தின் தளபதி மேஜர் ஜெனரல்கே.எச்.பி.பி பெணான்டோ அவர்கள் படைப் பிரிவின் 12ஆவது ஆண்டு நிறைவு தின விழாவை முன்னிட்டு ஞாயிறு 1 ஆம் திகதி சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இந்த ஆண்டு நிறைவு தின விழாவை முன்னிட்டு புத்த தேர்ர்களுக்கான அண்ணதானம் முல்லியாவெளியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திற்கான மதிய உணவுகள் ஆகியன நவம்பர் 29-30 திகதிகளில் படைத் தலைமையக வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் இப் படைத் தலைமையக தளபதி உள்ளடங்களாக அனைத்து படையினருடனான தேநீர் விருந்துபசார நிகழ்வுகளும் இடம் பெற்றது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்சிகள் இடம் பெற்றதோடு படைத் தலைமையகங்கள் மற்றும் படைப் பிரிவுகளின் படையினர்களை உள்ளடக்கி இடம் பெற்ற கிரக்கெற் மற்றும் காற்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் இப் படைத் தலைமையக தளபதியவர்களால் வழங்கப்பட்டது. Sports Shoes | New Releases Nike