Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

59ஆவது படைப் பிரிவினால் முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிப்பு

முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப் பிரிவின் 592ஆவது படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்போடு கொழும்பு 3இல் அமைந்துள்ள ஜோர்ச் குணரத்தின ஒப்டிகள்ஸ் இன் தலைமையில் இரு நாள் (ஜனவரி 10 -11) கண் சிகிச்சைக்கான நடமாடும் சேவை முல்லியாவெலி வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

அந்த வகையில் ஜோர்ச் குணரத்தின ஒப்டிகள்ஸ் இன் திரு லக்ஷ்மன் அகேகுணரத்தின அவர்கள் உள்ளடங்களான குழுவினரால் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கான கண் பரிசோதனைகளை நிகழ்த்தியதோடு இந் நிகழ்வில் 250ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இக் கண்பரிசோதனைகள் நிறைவூற்றதன் பின்னர் தெரிவூ செய்யப்பட்ட பார்வைக் கோளாறுள்ள 250பொது மக்களுக்கு ருபா 875,000.00 பெறுமதியால செலவீட்டிலான மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வானது முல்லைத் தீவூப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யநடத ராஜகுரு அவர்களின் வழிகாட்டலில் 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது.

மேலும் 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி அவர்களின் அழைப்பை ஏற்று முல்லைத் தீவூப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யநடத ராஜகுரு அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் அழைப்பை ஏற்று தன்னிமுறிப்பு உட்டங்கர் பிள்ளையார் கோவில் குருக்களான பத்மகுமார் குருக்களும் இந் நிகழ்வில் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் அதிகாரிகள் படையினர் மற்றும் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

spy offers | Nike Shoes