Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 20:16:37 Hours

583 வது பிரிகேட் படையினருக்கு நிகழ்நிலை பந்தயம் மற்றும் பண மோசடி பற்றிய அறிவூட்டல்

583 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் படையலகு படையினர் ஞாயிற்றுக்கிழமை (2024 ஜனவரி 21) அன்று ‘நிகழ்நிலை பந்தயம் மற்றும் பண மோசடிகள்’ பற்றிய செயலமர்வில் கலந்து கொண்டனர். 583 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்எச்ஜேடி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 583 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் இச் செயலமர்வு நடைபெற்றது.

அதன்படி, கெப்டன் பீஏபீஎஸ் சந்திர ரத்ன அவர்கள் பல்வேறு நிகழ்நிலை மோசடிகள் குறித்த செயலமர்வை பங்கேற்பாளர்களுக்கு நடாத்தினார். இச் செயலமர்வில் 16 அதிகாரிகள் மற்றும் முதலாவது இலங்கை சிங்க படையணி மற்றும் 6 வது விஜயபாகு காலாட் படையணியின் 380 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.