12th April 2024 16:48:25 Hours
582 வது காலாட் பிரிகேடினரால் 83 விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சியை 08 ஏப்ரல் 2024 அன்று ஹொரணையில் உள்ள சுகிதா மாற்றுதிறனாளி சிறுவர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
582 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம் எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும், வைத்தியர். தருஷி தில்ஹார மற்றும் வைத்தியர் ஜினாஞ்சலா ஷானிகா விஜேகுணசேகர ஆகியோரின் அனுசரணையுடன் பிள்ளைகளுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர்.