26th April 2023 18:20:48 Hours
முதலாம் படை தலைமையகத்தின் 58 வது காலாட் படைப்பிரிவின் 581 வது பிரிகேட் படையினரின் அனுசரணையுடன் ஏப்ரல் 25 ஆம் திகதி ஹட்டன் தமிழ் கல்லூரியில் கல்வி கற்கும் 100 மாணவர்களுக்கு தலா 3000/= பெறுமதியான பாடசாலை உபகரண பொதிகளை வழங்கினர்.
ஹட்ராமணி இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரிகேட் படையினர் வழங்கிய ஒருங்கிணைந்த அனுசரணைகள் மற்றும் பங்களிப்புடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடியலுடன் இணைந்து இந்த நன்கொடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
581 வது காலாட் பிரிகேட் தளபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அனுசரணையாளர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், கல்வி சார் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். 581 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.என் பெர்னானாடோ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இப்பகுதி மக்களின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு சமூகம் சார்ந்த இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி ஆகியோர் இந்த திட்டத்திற்கு தமது ஆசிகளை வழங்கினர்.