Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 15:22:30 Hours

581 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 5ஆவது நிறைவாண்டு தின நிகழ்வு

பூசாவில் அமைந்துள்ள 581 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 5ஆவது நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு புதன் கிழமை 26 ஆம் திகதி சமரசிங்க முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்காக படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட மதிய உணவும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மறுநாள் 27 ஆம் திகதி படையினர் விஷேட போதி பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

நிறைவாண்டு தினத்தன்று (மார்ச் 3) 581 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு படைத் தலைமையக கொடியினை ஏற்றியதோடு படையினர் மத்தியிலும் உரையாற்றினார். மேலும் படையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு விரந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.

அதே நாள் மாலை படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியவர்களின் தலைமையில் படையினர் கிரிகெட் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். Sportswear free shipping | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals