Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2024 14:15:48 Hours

58 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் புதிய வசதிகள்

புத்தளம் 58 வது காலாட் படைப்பிரிவில் 2024 ஏப்ரல் 26 ம் திகதி புதிய வசதிகளுடனான கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அனைத்து நிலையினருக்குமான மருந்தகம், சிற்றுண்டி நிலையம், மற்றும் புதிய ஏர் ரைபிள் துப்பாக்கி சூட்டு களம் ஆகியவற்றை கொண்ட இக்கட்டிடம் 58 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்.டபிள்யூ.கே.என் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 58 வது காலாட் படைப்பிரிவு பிரதித் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.