Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2023 22:18:40 Hours

58 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு

மூன்று நாட்கள் நீடித்த 58 வது இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி பல தேசிய மற்றும் இராணுவ சாதனைகளை நிறுவுவதில் இராணுவ வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தடகள வீரர்கள் சம்பியன்ஷிப்பை கைப்பற்றினர்.

மார்ச் 29 முதல் 31 வரை நடைபெற்ற தடகளப் போட்டியில், இராணுவத்தில் உள்ள அனைத்துப் படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 600 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டியிட்டனர். மேலும், இந்த போட்டியின் போது 08 இராணுவ சாதனைகளும் 04 தேசிய சாதனைகளும் பெறப்பட்டன.

இராணுவ தடகளக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ தடகளக் குழுவின் செயலாளர் பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் நெருக்கமான மேற்பார்வையில் இராணுவ தடகளப் போட்டிகள் இராணுவ தடகளக் குழுவினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டன.

வியாழன் (31) இடம்பெற்ற நிறைவு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இறுதி சாதனைகள் பின்வருமாறு:

முதலாம் இடம் - 292 புள்ளிகளுடன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

இரண்டாம் இடம் - 242 புள்ளிகளுடன் இலங்கை பீரங்கி படையணி

மூன்றாம் இடம் - 138 புள்ளிகளுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணி

நான்காம் இடம் - 96 புள்ளிகளுடன் இலங்கை இராணுவ சேவைப் படையணி

ஐந்தாம் இடம் - 83 புள்ளிகளுடன் கெமுனு ஹேவா படையணி

ஆறாம் இடம் - 27 புள்ளிகளுடன் கஜபா படையணி

ஏழாம் இடம் - 18 புள்ளிகளுடன் இலங்கை சிங்கப் படையணி

ஏழாம் இடம் - 18 புள்ளிகளுடன் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

ஒன்பதாம் இடம் - 12 புள்ளிகளுடன் இலங்கை சமிக்ஞை படையணி

பத்தாம் இடம் - 6 புள்ளிகளுடன் விஜயபாகு காலாட் படையணி

பதினொராம் இடம் - 5 புள்ளிகளுடன் இலங்கை கவச வாகனப் படையணி

பன்னிரெண்டாம் இடம் - 2 புள்ளிகளுடன் இலங்கை பொறியியல் படையணி