16th March 2020 15:34:28 Hours
புதிதாய் பதவியேற்ற 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ அவர்கள் கம்பொலையிலுள்ள இலங்கை இராணுவ அனர்த்த பயிற்சி முகாமிற்கு இம் மாதம் (16) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த அனர்த்த பயிற்சி முகாமிற்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதியை இந்த பயிற்சி முகாமின் கட்டளை தளபதி கேர்ணல் சுசந்த அமரகோன் அவர்கள் வரவேற்று இந்த அனர்த்த மையத்திலுள்ள பிரதான விரிவுரையாளரான மேஜர் சமன் தர்மரத்ன மற்றும் மேஜர் மேனக குணரத்ன அவர்கள் இந்த பயிற்சி முகாமின் பிரதான பணிகள் தொடர்பான விளக்கத்தை படைத் தளபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
பின்னர் படைத் தளபதி அவர்கள் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையையும் நிகழ்த்தினர். அத்துடன் படைத் தளபதி அவர்கள் அருகாமையிலுள்ள கொத்மலை பயிற்சி நிலையத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயங்களின் போது 581 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா அவர்களும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos