Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2022 11:17:00 Hours

573 வது பிரிகேட் படையணியின் முயற்சியால் மலையாளபுரம் மக்களுக்கு 50 உலர் உணவுப் பொதிகள்

சமூகத்தின் பின்தங்கிய குடும்பங்களுக்கான இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் மற்றொரு ஒரு திட்டமாக நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) கிளிநொச்சி மலையாளபுரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57வது படைப்பிரிவின் 573 வது பிரிகேடின் 9 வது விஜயபாகு காலாட் படையணி படையினரின் ஒருங்கிணைப்பில் தலா 2500/= ரூபா பெறுமதியான 50 உலர் உணவுப் பொதிகளை 573 வது பிரிகேட் படையினர் மூலம் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்வில் 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் தென்பகுதியைச் சேர்ந்த திருமதி சந்திரஷன் கவிஷா, திருமதி கவிஷா வீரகோன் மற்றும் திருமதி யமுனா திஸாநாயக்க ஆகியோரினால் இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கப்பட்டதுடன், 9 வது விஜயபாகு காலாட் படையணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி, பருப்பு, மிளகாய் தூள், உருளைக்கிழங்கு, தானியங்கள் போன்றவை உள்ளடங்கி இருந்தன.

இந்த நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் தளபதி, 571,572 மற்றும் 573 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.