06th March 2023 20:20:57 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் 573 வது காலாட் பிரிகேட் படையினர் அண்மையில் வியாழக்கிழமை (மார்ச் 02) இராணுவ மரபுகள் மற்றும் மதச் சடங்குகளுக்கு மத்தியில் தனது 3 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 573 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாங்குளத்திலுள்ள முகாம் வளாகத்தில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுழைவாயிலில் 573 வது காலாட் பிரிகேட் தளபதியை பிரிகேட் பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதன் பின், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அந் நாளின் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்தில் பங்கேற்பதற்கு முன்பு அவர் படையினருக்கு உரையாற்றினார்.
மேலும் மாலையில் மஹா சங்க உறுப்பினர்களை முகாம் வளாகத்திற்கு வரவழைத்து, வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் ஆத்மா சாந்திக்காகவும் காயமடைந்த வீரர்களின் பூரன சுகத்திற்காகவும் சேவையாற்றும் படையினரின் நலனத்திற்காகவும் ஆசி வேண்டி ‘போதி பூஜை’ நடாத்தப்பட்டது.