07th August 2023 21:07:04 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் 573 வது காலாட் பிரிகேட் படையினர் ஜூலை 25 மாங்குளம் மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மாங்குளம் மகாவித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலைகளுக்கு நூலகப் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
573 வது காலாட் பிரிகேட் படையணியின் சிவில் அலுவல்கள் அதிகாரி லெப்டினன் கேணல் டிடிஎஸ்ஆர்எம் துனுசிங்க அவர்கள் ரோயல் கல்லூரியின் அதிபர் திரு.மஹிந்தகலகெதர, கொழும்பு ரோயல் கல்லூரியின் தலைவர், கொழும்பு ரோயல் கல்லூரியின் தலைவர் திரு. ரசிக கலபதி ஆகியோரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் நூலகப் புத்தகங்களை ஒருங்கிணைத்தார். 'நெனபஹன' அமைப்பின் தலைவர் றோயல் கல்லூரியின் நூலக வாசிப்பாளர் சங்கத் தலைவர், கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத் தலைவர், மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர் திரு.தரிந்து விக்கிரமசிங்க ஆகியோரினால் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
573 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டபிள்யூஆர் பிரசன்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் தேவையுடைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு திட்டத்திற்கு உடனடியாக ஆதரவளிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் நன்கொடையாளர்கள், 573 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.