Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2020 10:35:06 Hours

572 மற்றும் 571ஆவது படைப் விரிவினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைககத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைத் தலைமையகத்தின் 572ஆவது படைப் பிரிவினரால் விஷ்வமடு மேற்கு கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பிற்கான சிரமதானப் பணிகள் சனிக் கிழமை (11) முன்னெடுக்கப்பட்டது.

இப் பணிகளை 6ஆவது இலங்கை சிங்கப் படைத் தலைமையகம் மற்றும் 14ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றம் 573ஆவது படைப் பிரிவு போன்றவற்றின் இரு அதிகாரிகள் உள்ளடங்களாக 50 படையினரால் டெங்கு ஒழிப்பு நிகழ்விற்கான பணிகளான குப்பை கூளங்களை சுத்திகரித்தல் மற்றும் பொது மக்களுக்கு இவை தொடர்பான விளக்கத்தை வழங்கல் தொடர்பான விடங்கள் மற்றும் சிரமதானப் பணிகள் போன்றன முன்னெடுக்கப்பட்டன.

இப் பணிகளில் விஷ்வமடு பொது சுகாதார அதிகாரி கிராம சேவகர் தர்மபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வானது 57ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இச் சிரமதானப் பணிகளை கிளிநொச்சி சென்றல் கல்லூரியின் அதிபரவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கிளிநொச்சி 571ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினர் மேற்கொண்டுள்ளனர்.

இப் பணிகளுக்கான உபகரணங்கள் மற்றும் திருத்தற்பாட்டு பொருட்கள் போன்றன இக் கல்லூரியால் இத் திருத்தற்பாட்டு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. bridge media | nike air jordan lebron 11 blue eyes black people