Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2021 10:43:34 Hours

571 வது பிரிகேட் படையினரால் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

வருமானத்தை பெற்றுக்கொள்ளல் மற்றும் ஊட்டச்சத்து காரணிகளைக் கருத்தில் கொண்டு, 571 வது பிரிகேட் படையினரால் 20,000 மீன் குஞ்சுகள் திங்கள்கிழமை (29) கிளிநொச்சி டிரையாறுகுளத்தில் விடப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக, வறுமை கோட்டின் கீழ் வாழும் மீன்பிடி குடும்பங்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத குடும்பங்களுக்கும் வருமானத்தை ஈட்ட உதவும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இத் திட்டமானது 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக வெலகெதர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படையினர் தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் கிளிநொச்சி கிளையின் ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்பட்டன.

இந்த திட்டத்தின் மூலம் மருதுநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மீன்பிடி குடும்பங்கள் பயனடைவர் என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் மீன்வளர்ப்பு விரிவாக்க அதிகாரி திரு எஸ்.சங்கிதன், கிளி நகர் கிராம சேவா பிரிவு, கிராம நிலதாரி பிரிவு பிரதேச மீன்வளர்ப்பு விரிவாக்க அதிகாரி திரு வை பிரசாத், மற்றும் கிராமவாசிகள் பலர் பங்கேற்றனர். Sports News | Nike Off-White