13th February 2020 08:23:07 Hours
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலிற்கு பூசை வழிபாடுகளுக்காக செல்லும் பக்தர்களின் நலன் கருதி கிளிநொச்சியில் உள்ள 571ஆவது படைப் பிரிவின் 9ஆவது இலங்கை பொறியியலாளர் படையணியினரால் இக் கோவில் வளாகத்தைச் சுற்றி அவர்களுக்கான நடைபாதையானது அமைக்கப்பட்டுள்ளது.
இவ் நடைபாதையானது 57ஆவது பாதுகாப்பு படைத் தலைமயக தளபதியான மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை 25அடி அகலத்தையும் 175அடி நீளத்தையும் கொண்டமைந்துள்ளது.
இவ் நடைபாதையானது வெள்ளிக் கிழமை (07) திறந்து வைக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வமாக மதத் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 57ஆவது படைத் தலைமையக தளபதி மற்றும் 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Men’s shoes