Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2023 23:02:32 Hours

57 வது காலாட் படையினரால் விகாரை நிர்மாண பணி

கிளிநொச்சி லும்பினி விகாரையின் பிரதம குரு வண. இங்கிரியே ஸ்ரீ தர்மலங்கார தேரர், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 57 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட சந்நிதி ஞாயிற்றுக்கிழமை (மே 14) திறந்து வைக்கப்பட்டது.

57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் கட்டுமானப் பணிகளுக்காக மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட்டதுடன், 57 வது காலாட் படைப்பிரிவின் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.