01st December 2024 11:44:52 Hours
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பி.எம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் களுகஹதென்ன வித்தியாலயத்தில் உள்ள உள்ளக இடம்பெயர்ந்தோர் மையம் மற்றும் ரிதீகம மற்றும் களுகஹதென்ன ஆகிய இடங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2024 நவம்பர் 29 அன்று பார்வையிட்டார்.
தற்போதைய அனர்த்த முகாமைத்துவ பணிகளை மதிப்பிடுவது, அவசரகால நிவாரண திட்டங்களின் நிலையை மதிப்பிடுவது மற்றும் இடம்பெயர்ந்தோர் மையங்களின் நிலையை ஆய்வு செய்வது ஆகியவை இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.
571 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி கேணல் எச்எச்எஸ்பீஎஸ் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுடன் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் டீஎஸ்பீ குமார ஆர்எஸ்பீ இணைந்து 2024 நவம்பர் 30 அன்று அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.
பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள், குருநாகலைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவப் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனமான வேர்ல்ட் விஷன் மற்றும் தொணடர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.