26th April 2023 18:40:48 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 வது காலாட் படைப்பிரிவு பாடசாலை மாணவர்களிடையே வலைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள 11 பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையே நட்புரீதியான வலைப்பந்தாட்டப் போட்டியை 2023 ஏப்ரல் 20-21 ம் திகதிகளில் கிளிநொச்சி விளையாட்டுப் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இத் திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ, 57 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டம் வலைப்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி போட்டியில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி மற்றும் புனித தெரேசா பெண்கள் கல்லூரி ஆகியன இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றதுடன் முக்கம்பன் மகாவித்தியாலய அணி சம்பியனாகியது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி போட்டியை பார்வையிட்டதுடன் வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இறுதி போட்டியில் வலயக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான உள்ளூர் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.