Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2023 22:07:58 Hours

57 வது காலாட் படைப்பிரிவு சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் படையினர் காலாட்படை பிரிவில் சேவையாற்றும் 14 சிவில் ஊழியர்களின் 20 பிள்ளைகளுக்கு பாடசாலை உதவிப் பொதிகளை வழங்கும் நலன்புரி செயற்திட்டமொன்றை கிளிநொச்சியில் அமைந்துள்ள 57 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வியாழக்கிழமை (மார்ச் 30) ஏற்பாடு செய்திருந்தனர்.

நீர்கொழும்பு இரண்டு வர்த்தகர்களான திரு. ஜீவந்த பெர்னாண்டோ மற்றும் திரு. டெரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோரால் 57 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த திட்டத்திற்கு நிதியளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் 20 மாணவர்களுக்கு தலா ரூ. 3500.00 பெறுமதியான பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டன.இந் நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 57 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.