Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2019 09:38:21 Hours

57ஆவது படைத் தலைமையக படையினரால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் நிகழ்வுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு நத்தார் தின நிகழ்வுகள் நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் வெள்ளிக் கிழமை (13) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் அருட் தந்தை பி ஜெ ஜெபரத்னம் அவர்கள் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கிளிநொச்சி பிரதேச செயலக மேலதிக மாவட்ட செயலாளரான திரு எஸ் சத்தியசீலன் பல அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேற்கொள்ளளும் நோக்கில இடம் பெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி வாலிபர்கள் மற்றும் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டதோடு யாழ் அருட்தந்தை பி ஜெ ஜெபரட்னம் அவர்களால் நத்தார் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதோடு அருட் தந்தை டாணியேல் மற்றும் அருட் தந்தை விக்னேஸ்வரன் போன்றோரால் வேத பாட வாசிப்பானது மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் தமது நன்றிகளையும் நிகழ்வுகளை முன்னெடுத்தமைக்கான பாராட்டுக்களையும் யாழ் அருட்தந்தையவர்களுக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நத்தார் தின கீதங்கள் சிங்கள தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை மையப்படுத்தி இடம் பெற்றது. இந் நிகழ்வுகளில் பாரதிபுரம் ஞானஸ்தான ஆலயம் கிளிநொச்சி தென் இந்தியா எனும் ஆலயம் அங்கிலிக்கன் திருச்சபை கிளிநொச்சி புனித திரேசா கிளிநொச்சி ஆலயம் மற்றும் அமெரிக்க சிலோன் ஆலயம் இராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் மற்றும் மேடை கரோல் குழுவினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் பிலீட்ஸ் நவிடட் எனும் நத்தார் கரோல் கீதத்தை பாடிய கொயர் குழுவினர்களுக்கு அருட் தந்தை பி ஜெ ஜெபரத்னம் அவர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் இப் படைத் தலைமையக முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரியான மேஜர் ஜெனரல் ஏடீ எல்வத்த 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பி பீ எஸ் டி சில்வா 66ஆது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் எம் டீ விஜேசுந்தர கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் படையினர் அரச அதிகாரிகள் மற்றும் பாரிய அளவிலான பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்;ந்து 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களின் தலைமையில் தத்தால் ஆறு 1ஆவது சிங்கப் படையணித் தலைமையகத்தில் நத்தார் தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது விசேட நத்தார் தின நிகழ்வுகள் இடம் பெற்றதோடு இந் நிகழ்வுகளினல் 573ஆவது படைப் பிரிவின் 15அதிகாரிகள் மற்றும் 200 படையினர்கள் உள்ளடங்களாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். jordan Sneakers | Nike Shoes