31st December 2021 21:10:39 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா முல்லேரியாவில் உள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (31) காலமானார்.
அவர் சமீபத்தில் கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்ட பிறகு ஏற்பட்ட பல மருத்துவ சிக்கல்கள் காரணமாக அவரது மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறினர். மேலும் அவரது பூதவுடல் தற்போது இல. 127/2/B 'சுதர்ஷனி', பஹல கரகஹமுன, கடவத்தையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பண்டுக பெரேரா 1990 நவம்பர் 3 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்ததுடன் பின்னர் அவர் இலங்கை சிங்க படையணியில் இணைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி 3) கடவத்தை எல்தெனிய மயானத்தில் இராணுவ மரியாதையுடன் நடைபெறவுள்ளது.