29th August 2023 22:35:41 Hours
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேடின் முயற்சியினால் ஏடம்ப கஸ்கட வித்தியாலயம், அக்ரபோதி வித்தியாலயம், மகாகச்சிக்குடி வித்தியாலயம், போகஸ்வெவ பாடசாலைகள் மற்றும் நெடுங்குளம் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் 150 மாணவர்களை புதன்கிழமை (ஓகஸ்ட் 23) மாமடுவ ஸ்ரீ ஸ்வர்ண திலகாராமயத்திற்கு அழைத்து பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் மக்கள் வங்கி பௌத்த சங்கம், பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்குவதற்கு அனுசரணை வழங்கியது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி, மக்கள் வங்கி பௌத்த சங்கத்தின் திரு. ரொஹான் பெரேரா மற்றும் மக்கள் வங்கியின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எஸ்ஜே தென்னகோன் ஆர்எஸ்பீ, 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்ஜி பண்டாரநாயக்க யுஎஸ்பீ பீஎஸ்சி, வலயக் கல்வி பிரதிக் பணிப்பாளர் திரு. ஆர் வீரசிங்க, படையலகுகளின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பயனாளிகளால் வழங்கப்பட்ட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிகழ்வை வண்ணமயமாக்கின.