28th June 2023 22:31:29 Hours
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள நோயுற்ற மற்றும் வறியவர்களுக்கு உதவும் நிமித்தம் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப் பிரிவின் 562 வது காலாட் பிரிகேட்டின் நடமாடும் மருத்துவ முகாமொன்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் தவசி குளம் அரச பாடசாலை வளாகத்தில் ஜூன் 24 அன்று நடாத்தப்பட்டது.
இம் மருத்துவ சோதனையில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு, தொற்றா நோய்கள் ஆய்வக சோதனை, ஸ்கேனிங் மற்றும் பல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றனர். இதேவேளை, நோய்த்தடுப்பு சுகாதார நடைமுறைகள், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மனநலத்தைப் பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு அதே சந்தர்ப்பத்தில் கற்பிக்கப்பட்டது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் எம் மகேந்திரன், வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலாக்ஷன் மற்றும் 25 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் வைத்திய பணியாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டதோடு கலந்துகொண்டவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்கினர்.
56 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்எ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 562 வது காலாட் பிரிகேட் படையினரால் ஆதரவு வழங்கப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ, மற்றும் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 56 வது காலாட் படைபிரிவின் கேணல் பொது பணி கேணல் ஆர்எஸ்சி திஸாநாயக்க ஆர்எஸ்பீ மற்றும் 562 வது காலாட் பிரிகேட்டின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதல்களுக்கமைய கலந்து கொண்டனர்.