12th March 2024 13:17:45 Hours
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, 561 வது காலாட் பிரிகேட் படையினர் கனகராயகுளத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுகள் விநியோகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை போன்றவை 07 மார்ச் 2024 அன்று 16 வது இலங்கை சிங்க படையணி முகாம் வளாகத்தில் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியின் போது, குறைந்த வருமானம் பெறும் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த வினியோக நிகழ்வில் ஊட்டச்சத்து தேவையுடைய 34 கர்ப்பிணிப் பெண்களும் கலந்துகொண்டனர். மேலும் கனகராயகுளம் ஆயுர்வேத வைத்தியசாலையுடன் இணைந்து பயனாளிகளுக்கு அதே இடத்தில் ஆயுர்வேத வைத்திய சிகிச்சையும் வழங்கப்பட்டது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் அந்தந்த கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 561 வது காலாட் பிரிகேட் படையினர் கட்டளையின் கீழ் உள்ள படையலகுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள அனுசரனையாளர்களுடன் இணைந்து நிகழ்வுக்கு நிதி உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் 561 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்.ஜி.ஏ. மலந்தெனிய ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.