02nd July 2023 21:32:47 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் கொக்கெலிய வவுனியா 56 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) ‘ஆரோக்கியமான வாழ்க்கை சமநிலையைப் பேணுதல்’ என்ற தலைப்பில் பெறுமதியான விரிவுரை நடாத்தப்பட்டது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திலானி கசுந்தர ஹெட்டியாராச்சி இந்த விரிவுரையை நிகழ்த்தியதுடன் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் எச்.ஜி.பீ.எம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்ஜி பண்டாரநாயக்க யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வினை மேற்பார்வையிட்டார்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, பிரிகேட் தளபதிகள், படைப்பிரிவு பணிநிலை அதிகாரிகள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.