15th July 2024 15:11:03 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள பார்வை குறைபாடு உள்ளோர்களுக்கு உதவும் நோக்கில் மருத்துவ முகாமை ஒன்றினை 13 ஜூலை 2024 அன்று 16 வது இலங்கை சிங்கப் படையணி 'பி' பிரிவு வளாகத்தில் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டது. முதல் கட்டத்தில், 291 பார்வை குறைபாடுள்ள நபர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டாவது கட்டத்தில் 33 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சைகள், மற்றும் 10 நோயாளிகளுக்கு மூக்குகண்ணாடிகள் மற்றும் 211 பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வாசிப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி அமைப்பின் செயலாளர் வைத்தியர் சர்வேஸ்வரனின் அனுசரணையுடன், இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும், சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.