29th July 2024 17:21:18 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர் வழிகாட்டலின் கீழ் 56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மற்றும் 562 வது காலாட் பிரிகேடின் படையினர் 24 ஜூலை 2024 அன்று பேயடிகுளத்தில் படகோட்டல் போட்டியை ஏற்பாடு செய்தனர்.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்கள் கலந்துகொண்டார். போட்டி தொடரில் பங்கேற்பாளர்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மூவர் ஸ்கல்லர் நிகழ்வுகள் என மூன்று பிரிவுகளில் போட்டியிட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பண ஊக்குவிப்புக்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் வெற்றியானது 'ரம்பாவெற்டிநன்னீர்' உள்ளூர் மீனவ சங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு படகுகள் மற்றும் துடுப்புகளை வழங்கலுடன், சுமூகமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி உறுதியுடன் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.