Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2023 21:27:19 Hours

56 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகளுக்கு புவியியல் நிலை தொடர்பில் அறிவு

கனகராயன்குளம் 56 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகளின் அறிவு மற்றும் முன்வைத்தல் திறன்களை மேம்படுத்துவதற்காக, 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜி.பீ.எம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் ஏற்பாட்டில் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் (புதன்கிழமை) 27 செப்டம்பர் 2023 அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

'இலங்கையின் நிலையான எதிர்காலம்: இந்தியாவில் புவியியல் அரசியல், பூகோள மூலோபாயம் மற்றும் பூகோள பொருளாதாரத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக இது சாத்தியமா' என்ற தலைப்பில் 561 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கீழ் உள்ள படையணிகளுக்கு, 561 வது காலாட் பிரிகேட் தளபதி கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த விளக்கக்காட்சி நடாத்தப்பட்டது.

561 வது பிரிகேடின் பணிநிலை அதிகாரிகள், மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகளின் பங்களிப்புடன் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரியினால் விளக்கக்காட்சி குழு வழிநடத்தப்பட்டது. 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜி.பீ.எம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி, 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.எம்.எஸ்.ஜே தென்னகோன் ஆர்எஸ்பீ, 561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.எம்.ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், முன்னிலையில் நடைபெற்றது.

விளக்கக்காட்சியானது கேள்வி பதில் அமர்வுடன் நிறைவடைந்தது, இதில் பார்வையாளர்கள் பாடம் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்த முடிந்தது. இறுதியாக, 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சாத்தியமான பரிந்துரைகளுடன் தலைப்பில் தனது மதிப்புமிக்க உள்ளீடுகளை விரிவுபடுத்தியதுடன், விளக்கக் குழுவின் முயற்சிகளை பாராட்டினார்.