15th July 2024 11:58:48 Hours
புத்தூர் மற்றும் வவுனியாவில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவுவதற்காக 56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மற்றும் 16 வது இலங்கை சிங்க படையணியின் “ஏ” பிரிவு இராஜேந்திரகுளம் மகா வித்தியாலயத்தில் 10 ஜூலை 2024 அன்று மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட தொடர் கண் மருத்துவ சிகிச்சைகளின் பயனாக, 310 பார்வை குறைபாடு உள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, மூக்குகண்ணாடிகளைப் பெறும் திட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 56 வது காலாட் படைப்பிரிவின் படையினர் சிற்றுண்டிகளையும் வழங்கினர்.
மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி அமைப்பின் செயலாளர் வைத்தியர் வி.சர்வேஸ்வரன் மூலம் மலேசியாவின் அலகா மற்றும் ஆனந்த அறக்கட்டளைகளின் பங்களிப்போடு இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி,561 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைப்பின் உதவிப் பணியாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.