Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2024 12:18:26 Hours

56 வது காலாட் படைப்பிரிவினரால் காக்கயன்குளத்தில் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குகண்ணாடிகள்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்,12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியினரால் 02 ஒக்டோபர் 2024 அன்று காக்கயன்குளம் சன சமுக நிலையத்தில் மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் 102 பொதுமக்கள் மூக்கு கண்ணாடிகளை பெற்றுக்கொண்டனர். மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி அமைப்பின் தலைவர் வைத்தியர் வி.சர்வேஸ்வரன் இந்த நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், காக்கயன்குளம் தேவாலயத்தின் தலைவர் திரு.பசீர் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.